Friday, January 3, 2014

                   எம் உலகம்..!
நேற்று.....!

அணுவைச் சிதறும் ஆயுத பெருக்கம்!
மனுவைப்  பிளக்கும்  மானிட இயக்கம்!
வலியைச் சுமக்கும் விடுதலை முழக்கம்!
வலிமை வியக்கும் இயற்கை  கலகம் !    

இன்று....!

திரு'வாய்ப் பிறந்த தெளித் தேனமுதம்!
மொழியாய் மலர்ந்த முப்பால் இன்பம்!
கருவாய் திகழும் தமிழ்ப் பாலமுதம்!
தமிழை முழங்கும் தமிழே உலகம்!      
மேய்ப்பர்கள் !

நகரத்தில் நாய்கள் மேய்ப்பார்கள்!
கிராமத்தில் மாடுகள் மேய்ப்பார்கள்!
நகரத்தில் நாய்கள் மேய்த்தால் நாகரீகம்!
கிராமத்தில் மாடுகள் மேய்த்தால் மட்டரகம்!

Thursday, January 2, 2014

வருவார்கள்....! விழித்திருங்கள்..!

செங்காவி உடை யணிந்த மாபாவிகள்!
பங்காளி பொருள் எரித்த இழிதாசன்கள்!
பெரியாரின் நெறி புதைத்த கோசாமிகள்!
புரியாமல் சொல்லெறிந்த விசையன்கள்!
மலடுகள்..?

கருவறையில் நுழைய 
காவு கேட்கும் 
கற்கடவுள்கள்..? 

தெருமுனையில் 
சூடம் ஏற்ற தவமிருக்கும்
மனிதப் பதர்கள்..?

தேநீர் கடையில்
தனி தம்ளரில் தரமிழக்கும்
தெருநாய்கள் ..?

மாற்றொன்று தேடாமல்
மனம் குறுகி மலம் அள்ளும்
மலட்டு மண்புழுக்கள்..?
காவி கொடியேந்தும் கறுப்பாடுகள்! 

மணி"யடித்ததால் மனது கரைந்தவர்கள்!
மது"குடித்ததால் மயக்கம் அடைந்தவர்கள்!
வெறி"பிடித்ததால் மனிதம் எரித்தவர்கள்!
நெறி"பிரண்டதால் நெஞ்சம் துறந்தவர்கள்!