Tuesday, December 31, 2013

சாதி என்னும் குறியீடு நீங்க இட ஒதுக்கீடு தொடரலாம்........!



தமிழர் என்பது பிறப்பினத்தொகுதி- இன அடிப்படையிலானது 
சமூகம் என்பது வாழ்வினத்தொகுதி- பொருள், செயல் நிலையிலானது 
சாதி என்பது குழுமத் தொகுதி- தொழில், சூழல் நிலையிலானது 
கணினி யுகத்தில் வாழும் மக்கள் கல்வி மேம்பாடு கொண்டுள்ளதால் யாரும் எந்த தொழிலிலும் ஈடுபட தடை இல்லை! (தீவிர (சாதி உணர்வாளர்களை கணக்கில் கொள்ளவேண்டாம்)
பட்டியல் இனத்தில் பிறந்த ருவன் ல்வியில்அறிவியலில்,வாழ்வியலில் 
சிறந்து விளங்கினாலும் கூட அவனுக்கு சாதி முத்திரை குத்தப்பட்டு விலக்கி 
வைக்கப்படுவது இன்னும் தொடர்கிறது,எனவே சாதி என்னும் குறியீடு நீக்க படலாம் 
ஆனால் ஒருவனின் சமூகம் மேம்பாடு அடைய இட ஒதுக்கீடு தொடரலாம்........!

Monday, December 30, 2013

தனிநபர் துதி மோது! 


வாழ்வியல் விடுதலைக்கு கருத்தியல் களமாடு!
ஊழ்வியல்' வினைமுரிக்க இயங்கியல்' பாலமிடு!
மெய்யியல்' மனம் ஒளிர எண்ணியம்' வழிதேடு!
தர்கவியல் தளம் அறிந்து தனிநெறி துதிமோது!


காவிகள் பெருந்துன்பம் சேராமை பெருமிதம்!

கழகக் கொடிகளில் காவிகள் ஏறும்!
காவிக் கைகளில் காட்சிகள் மாறும்!
அறிவாலயங்கள் கமலயம் ஏறலாம்! 
தைலாபுரங்கள் சாமரம் வீசலாம்!

கருத்தியல் வீரியம் கருவறை ஊற்றிடம்!
பகுப்பியல் சாங்கியம் பற்றியல் உறைவிடம் !
விருப்பயியல் விளைவியல் வாழ்வியல் பெருமியம்     
சிற்றின்பம் பெருந்துன்பம் சேராமை பெருமிதம்!






Thursday, December 26, 2013

தனிநபர் துதி மோது! 


வாழ்வியல் விடுதலைக்கு கருத்தியல் களமாடு!
ஊழ்வியல்' வினைமுரிக்க இயங்கியல்' பாலமிடு!
மெய்யியல்' மனம் ஒளிர எண்ணியம்' வழிதேடு!
தர்கவியல் தளம் அறிந்து தனிநெறி துதிமோது!



தமிழோவியம் இங்கு உயிரோவியமாய் ..!

அழகு மலைகளில் தவழும் குளிரே..!
மருகும் மலர்களில் உறங்கும் அரும்பே..!
தவழும் முகில்களில் பிறக்கும் மழையே..!
மருத வயல்களின் இனிக்கும் கரும்பே..!

கனிகள் அடுத்த கனிந்த சுவையே..!
பனியில் வெடித்த பைந்தமிழ் மலரே..! 
இனித்தம் எடுத்த பெண்மை ஒளிரே..!
மனிதம் விதைத்த மேன்மை அழகே..!